கார்மல் பள்ளியில் புத்தகக் கண்காட்சி

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் புத்தகக் கண்காட்சி:
----------------------------------------------------------------------
#புத்தகம்_படிப்பதன்_நன்மைகள்:
எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம். “உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ. சிறந்த நூல்களே மிகச்சிறந்த ஆசிரியர்! “நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களே” என்றார் கவிஞர் ராபர்ட் கதே.

ஜனவரி 30
திருவனந்தபுரம் பால் லைன் பதிப்பகம்
நமது பள்ளி மாணவர்களுக்கு
புத்தக கண்காட்சியை நடத்தியது.
பள்ளித் தலைமையாசிரியர் அருட்திரு.ஆ.வில்சன் சே.ச.
அவர்கள் கண்காட்சியை திறந்துவைத்தார்.
பள்ளித் தாளாளர் அருட்திரு.சேவியர் ராஜ்
சே.ச. முன்னிலை வகித்தார்.
வகுப்பு வாரியாக மாணவர்கள் புத்தங்களை
பார்த்து வாங்கிச் சென்றனர்.

Date
News Image